வடலூர் அருகே கருங்குழி மற்றும் கொளக்குடி வயலுக்கு செல்லும் பாதையில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். இதில் போதை தலைக்கேறியதும் காலி மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு அவர்கள் செல்கின்றனர். இதனால் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் விவசாயிகள், தொழிலாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.