அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் சாலையில் உள்ள சுந்தராம்பாளையம் சேலத்தான்காடு என்ற இடத்தில் சுமார் 40 அடி உயர பனை மரம் காய்ந்த நிலையில் உள்ளது. மேலும் எப்போதும் வேண்டுமானாலும் சாலையின் குறுக்கே சாய்ந்து விழு வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகளோ, நடந்து செல்பவர்களோ விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும். அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.