சட்டவிரோத மது விற்பனை

Update: 2025-08-03 14:05 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே இப்பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்