பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பகுதியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் இப்பகுதியில் அதிக அளவில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிப்பட்டது. இதை அறிந்த சம்பந்தப்பட்ட போலீசார் செட்டிகுளம் பகுதியில் சோதனை நடத்தி, இப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை கைது செய்தனர். தற்போது இப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை குறைந்துள்ளதால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.