கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் குமரண்டன்வலசு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பஸ்நிறுத்தம் இல்லாததால் வேலை நிமித்தமாக அரவக்குறிச்சிக்கு செல்பவர்கள் நடந்தே தான் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குமரண்டன்வலசு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.