புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள தெருவிளக்கு மின்கம்பத்தில் ஏராளமான செடி, கொடிகள் படர்ந்து மின்கம்பமே தெரியாத அளவிற்கு உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு எரியாமல் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களும் நடைபெற அதிக வய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.