கணபதிபுரம் பேரூராட்சி புதூரில் சிவசுடலைமாடன் கோவில் அருகில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டின் அடிப்பகுதியில் தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த காணப்படும் நீர்தேக்கத்தொட்டியின் தூண்களை சிரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, புதூர்.