மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குட்டைப்புதூர் கிராமத்தில் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் அந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே குட்டைப்புதூரில் புதிதாக ஊர் பெயர் பலகை அமைத்து தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.