கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் பிள்ளையார் கோவில் தெரு, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் தொல்லை உள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.