பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றின் கரையோரம் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த இறைச்சி கழிவுகளை தெருநாய்கள் கடித்து குதறுவதால் அவற்றுக்கு வெறிபிடித்து இப்பகுதி மக்களை கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.