பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைபள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவிகள் அமரும் வகையில் போதிய இருக்கைகள் அமைக்கப்படாமல் குறைந்த அளவிலான இருக்கைகள் உள்ளது. இதனால் சில மாணவிகள் இருக்கைகளில் அமர்ந்துகொண்டும், சில மாணவிகள் தரையில் அமர்ந்து கொண்டும் கல்வி பயின்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளியில் போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.