நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோர்ட்டு ரோட்டில் டதி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த சாலையில் பள்ளியின் எதிரே ஒரு வேப்பமரம் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் இந்த மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை அகற்றிட வேண்டும்.