கடையநல்லூர் அருகே மடத்துப்பட்டி ஊராட்சி பாறைகுளம் கிராமத்தில் உள்ள நீர்தேக்கத் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் பள்ளிக்கூடம் மற்றும் கோவில் உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஆபத்தான நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.