புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாட்டில் இருந்து ஆலங்குடி செல்லும் வழியில் உள்ள வாழமங்களம் என்ற ஊரிற்கான பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இது எந்த ஊர் என தெரியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊரின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.