தவளக்குப்பம் கிராமத்தில் இளவரசன் நகரில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.