பராமரிப்பற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2025-07-20 15:15 GMT
விருத்தாசலம் அருகே இருசாளக்குப்பம் பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடம் மிகவும் பலவீனமாக இருப்பதால் அங்கு பயணிகள் நிற்க அச்சமடைந்து வருகின்றனர். இதனால் வெட்டவெளியில் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் பஸ் ஏறி சென்று வருகின்றனர். இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்