சீரமைக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2025-07-20 13:19 GMT

பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட அரணாரையில் பொதுமக்களின் நலன் கருதி பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை சுற்றி செடி-கொடிகள் அதிக அளவில் முளைத்துள்ளதால் காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த வரும் பொதுமக்களை விஷ ஜந்துக்கள் தீண்டும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்