கரூர் மாவட்டம், புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கூட்டமாக போலீஸ் நிலையத்தில் கூடும்போது இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போலீஸ் நிலையத்திலேயே பார்வையாளர்களுக்கு என தனி அறை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பார்வையாளர்களுக்கு என காத்திருப்போர் அறை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.