ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2025-07-20 10:50 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் கிராமத்தில் சுமார் 5000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் பல நேரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்