சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையோரத்தில் போடப்படும் வெள்ளை நிற குறியீடு கோடு தற்போது வரை போடவில்லை. அதிகம் போக்குவரத்து நிறைந்து காணப்படும் அப்பகுதியில் இந்த கோடுகள் போடப்படாததால் புதிதாக அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையில் திருப்பத்தை கண்டரிய சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் வெள்ளை நிற கோடுகள் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.