நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட முகிலன்விளையில் ரூ. 48 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இதனால், அந்த கட்டிடத்தை சுற்றி முட்செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. மேலும், பாம்புகள் நடமாட்டமும், மது பரியர்கள் அடைக்கலமாகவும் மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.