மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி ஜீவாநகர் 2-வது தெரு கடைசியில் உள்ள சோனையார் கோவில் தெரு மற்றும் தென்றல் நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டு ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது வரை அதில் எவ்வித குறியீடுகளும் இன்றி உள்ளது. இதனால் அதனை அறியாமல் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடைகளில் சிக்கி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற குறியீடு இட நடவடிக்கை எடுக்க வேண்டும்.