மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகர் மெயின் ரோடு மற்றும் வில்லாபுரம் சின்னக் கண்மாய் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கன் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும், வாகனத்தில் செல்வோரையும், பள்ளி செல்லும் குழந்தைகளையும் துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் சிலர் விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன் கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?