தூர்வாரப்படாத வரத்து வாய்க்கால்

Update: 2025-07-13 12:32 GMT

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மருதை ஆற்றிற்கு செல்லும் வரத்து வாய்க்கால் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த வரத்து வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்