சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி வரை புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் வெள்ளை நிறவர்ண கோடுகள் போடப்படவில்லை. இதனால் சாலையின் அளவு தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வெள்ளை நிற வர்ணம் கொண்ட கோடுகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.