சிறுபாக்கம், அரசங்குடி, மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் விரட்ட வருபவர்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.