சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகே இறைச்சிக்கடைகள் அதிகளவில் உள்ளன. இதனால் அப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்கப் பாய்கிறது. மேலும் இவைகளால் அடிக்கடி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.