திசையன்விளை பஸ் நிலையத்தை அடுத்து நெல்லை ரோடு இணையும் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் சாலையின் தென்புறம் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பலத்த காற்றில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.