திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகே உள்ள பிள்ளாப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இந்த பள்ளி வளாகத்திற்குள் புகும் மர்ம நபர்கள் சிலர் மது அருந்திவிட்டு, பாட்டிலை அங்கேயே போட்டு உடைத்து விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் மாணவ- மாணவிகள் காயமடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த அரசு பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.