திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி 9-வது வார்டு லட்சுமி நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.