ஆடு,கோழிகளை வேட்டையாடும் நாய்கள்

Update: 2025-07-06 10:57 GMT

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை பகுதியில் அந்தோணியார் கோவில் தெரு உள்ளது. இங்கு நாய்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தோணியார்கோவில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்