கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அருகில் உள்ள அய்யம்பாளையத்தில் பொதுமக்களின் நலன் கருதி சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை இந்த சுடுகாட்டில் அடக்கம் செய்ய பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
