காட்டுமன்னார்கோவிலில் இருந்து குமாராட்சி செல்லும் பழைய திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் அதுகள் சாலையில் படுத்து கிடக்கின்றன. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும்முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.