அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2025-05-25 17:40 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், எரகுடி புறக்காவல் நிலையத்தை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன நிலையில் இப்பகுதியில் தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி போதிய அளவு இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் தாழ்வான இடங்களில் ஆங்காங்கே கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்