மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. அதிக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதுடன் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.