திண்டுக்கல் பழனி பையாஸ் ரோடு நான்கு வழிச்சாலை அருகே பேருந்து நிறுத்தும் பகுதியில் நிழற்குடை வசதி இல்லாத காரணத்தால் முதியவர்கள், மாணவ-மாணவிகள், பெண்கள் கடுமையான வெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டி உள்ளதால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி நிழற்குடை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.