விருதுநகர் ஆர்.எஸ். நகர் காவேரி தெரு, கிருஷ்ணா தெரு பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் கழிவுநீருடன் சில பன்றிகள் குடியிறுப்பிற்க்குள் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.