குளத்தை விரைவில் சீரமைக்க கோரிக்கை

Update: 2025-05-25 14:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஸ்நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான பங்களா குளம் உள்ளது. இந்த குளத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பணிகள் தொடங்கி ஓராண்டு கடந்து விட்டநிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மழை காலம் தொடங்கி விட்டால் இன்னும் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குளத்தின் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்