பொது சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

Update: 2025-05-25 12:57 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், அகரம்சீகூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் முன்பு பொதுமக்கள் சிலர் இயற்கை உபாதை கழிப்பதினால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச பொது சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்