தென்காசி மாவட்டம் கடையம் அருகே காவூர் விலக்கு- தெற்கு மடத்தூர் இடையே புதிய சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதாக குமார் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து புதிய சாலை அமைக்கும் பணி துரிதமாக முடிக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.