கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூர் பகுதியில் சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கும், எரிமேடையில் வைத்து எரிப்பதற்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவருடன் கூடிய மயானம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மயானத்தை சுற்றிலும் ஏராளமான செடி- கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க முயாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.