திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் பரம்பை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் வேலை, கல்வி, மருத்துவம், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை மற்றும் வெயில் நேரங்களில் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.