ஒட்டன்சத்திரம் தாலுகா ரெட்டியபட்டியை அடுத்த பெரிய கரட்டுப்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை திறக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி'யின் புகார்பெட்டி பகுதியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு வந்தனர். இதற்காக ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.