சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் கிராமம் புதுகாலனியில் அங்கன்வாடி மையம் அருகே ஒரு பழைய கிணறு உள்ளது. இதன் ஒரு பக்கம் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்-சிறுமிகள் கிணற்றுக்குள் தவறி விழ வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு பழுதடைந்த நிலையில் காணப்படும் கிணற்றை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?