நசியனூர்-மேட்டுக்கடை சாலையில் சிந்தன்குட்டை கால்நடை மருத்துவமனை அருகே பேரூராட்சிக்கு சொந்தமான நவீன கழிப்பிடம் உள்ளது. இது பல மாதங்களாக பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?