கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் விநாயகர் கோவில் அருகில் குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் நடந்து செல்கிறவர்கள் குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.