பூட்டப்பட்ட சுகாதார வளாகம்

Update: 2025-05-18 09:39 GMT

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குளத்துப்பாளையம் பகுதி பெண்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை இப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்த நிலையில், காலப்போக்கில் இந்த சுகாதார வளாகம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த சுகாதார வளாகம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூட்டப்பட்டது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த சுகாதார வளத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்