கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கியில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தில் இருபுறமும் தடுப்பு இன்றி உள்ளது. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. சிறிய பாலம் என்பதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக அகலமான நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தை கட்டி கொடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.