பயனற்ற சேவை மையம்

Update: 2025-05-11 16:49 GMT

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி சார்பில் சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சேவை மையம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. ஊராட்சி சேவை மையம் மாணவ- மாணவிகளுக்கும், பல்வேறு தரப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்கும் வகையில் கட்டப்பட்டது. இருப்பினும் சேவை மையம் கட்டி திறப்பு விழா நடைபெற்றதோடு சரி அதன் பிறகு இந்த சேவை மையம் செயல்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்