விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெரிய கண்மாயில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் சிலர் குப்பைகளையும் கொட்டுவதால் கண்மாய் மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார வேண்டும்.